சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார்: ரஜினிக்கு ஹர்பஜன்சிங் வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (10:58 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாணியில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
"என் மாருமேல சூப்பர் ஸ்டார்"
80's பில்லாவும் நீங்கள் தான்
90's பாட்ஷாவும் நீங்கள் தான்
2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா 
ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்