ஓவியாவின் அடுத்த பட டைட்டில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (23:40 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓவியா, அந்த வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றும், திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.



 
 
இந்த நிலையில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி 'ஹரஹர மகாதேவா' படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து
 
இந்த படத்திலும் ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படத்தில் நடிக்க அவர் பாசிட்டிவ் பதில் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்