ஒரு வழியாக ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஹனுமான் படக்குழு!

vinoth
செவ்வாய், 26 மார்ச் 2024 (14:13 IST)
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான 'ஹனுமான்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டி வருகிறது.  பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. இந்த படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. வெளியானது முதலே பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது.

25 நாட்களில் இந்த படம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது. இந்த ஆண்டின் மெஹா பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக ஹனுமன் திரைப்படம் அமைந்த நிலையில் ஜி 5 ஓடிடி தளத்தில் மார்ச் 8 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தப்படி அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த வாரமும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கத்தில் அதிருப்தியை வெளியிட்டனர்.

இதையடுத்து இயக்குனர் பிரசாந்த் வர்மா இப்போது விளக்கமளித்துள்ளார். அதில் “வேண்டுமென்றே நாங்கள் தாமதப்படுத்தவில்லை. சிறப்பான ஒன்றை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என பாடுபட்டு வருகிறோம். அதைப்புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது ஒருவழியாக ஹனுமான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் 5 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்