7 ஆண்டுகள் காத்திருந்த படத்தை மீண்டும் தொடங்கிய இயக்குனர்… சுவாரஸ்ய பின்னணி

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (12:37 IST)
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் 2015 ஆம் தொடங்கப்பட்ட திரைப்படம் மின்மினி.

இயக்குனர் ஹலிதா ஷமீம் தான் இயக்கிய பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக் கருப்பட்டி ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இதையடுத்து அவர் இப்போது சமுத்திரக்கனி மற்றும் நடிகர் மணிகண்டன் ஆகியோர் இயக்கத்தில் ஏலே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தந்தை மகன் பிணைப்பைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டே அவர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட மின்மினி திரைப்படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பவை. முதல் பாதியில் கதாபாத்திரங்கள் குழந்தைகளாகவும், இரண்டாம் பாதியில் அவர்கள் வளர்ந்த பின்னரும் கதை நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் குழந்தைப் பருவ காட்சிகளை 7 ஆண்டுகளுக்கு முன்னர் படமாக்கிய நிலையில் படத்தில் நடித்த குழந்தைகள் வளருவதற்காக 7 ஆண்டுகள் காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் அந்த படத்தைத் தொடங்கியுள்ளார் ஹலிதா ஷமீம். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்