பெரிய ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுத்தால் அது நல்ல படமாகிவிடாது- ஹெச் வினோத் கருத்து!

vinoth

சனி, 14 செப்டம்பர் 2024 (06:40 IST)
தமிழ் சினிமாவுக்கு சதுரங்க வேட்டை எனும் புதுமையான படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹெச் வினோத். அதன் பின்னர் அவர் கார்த்தியை வைத்து இயக்கிய ‘தீரன்’ படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பின்னர் வரிசையாக அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார்.

இப்போது விஜய்யின் கடைசிப் படமான ‘விஜய் 69’ படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். கமர்ஷியல் படங்களை இயக்கினாலும் வினோத் எப்போதும் மாற்று சினிமாக்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடியவர். கடைசி விவசாயி படத்தை மக்கள் துணிவு மற்றும் வாரிசு படங்களைப் பார்க்கக் காட்டிய ஆர்வத்தைக் காட்டியிருக்க வேண்டும் என வெளிப்படையாகவேக் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் அவர் சசிகுமார் நடிப்பில் இரா சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள நந்தன் படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, “பெரிய பட்ஜெட்டில் எடுப்பதாலோ, பெரிய ஹீரோ நடிப்பதாலோ அல்லது ஒரு படம் வசூல் வேட்டை செய்வதாலோ நல்ல படம் ஆகிவிடாது.  ஒருவனை நல்ல மனிதனாக மாற்ற முயற்சிக்கும் படம்தான் நல்ல படம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்