விஜய்யுடன் மோதத் தயார் ஆகும் சூர்யாவின் ‘கங்குவா’ பட வில்லன்!

vinoth

சனி, 14 செப்டம்பர் 2024 (06:36 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படம் முதல் நாளில் உலகளவில் 126 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத்  ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது குறித்தோ தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் படத்தை KVN நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாபி தியோல் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாலிவுட் நடிகரான பாபி, அனிமல் திரைப்படம் மூலமாக தென்னிந்தியாவிலும் கவனம் பெற்றார். தற்போது அவர் தமிழில் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்