என் முடிவுக்கு சீமான் அண்ணன்தான் காரணம்… இயக்குனர் வினோத் ஓபன் டாக்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:27 IST)
அஜித் நடித்த துணிவு திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. படத்தின் ப்ரமோஷனுக்காக இயக்குனர் வினோத் பல நேர்காணல்களை கொடுத்து வருகிறார். அதில் அவர் பகிரும் கருத்துகள் மற்றும் சினிமா பற்றிய அவருடைய பார்வைகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

இந்நிலையில் சமீபகாலமாக தனது பெயரில் இனிஷியலை தமிழில் எழுதுவது குறித்து கேட்ட போது “சீமான் அண்ணனிடம் ஒருமுறை போனில் பேசியபோது அவர்தான் பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது ஆங்கிலத்தில் இனிஷியல் போடு. தமிழில் எழுதும்போது தமிழில்தான் தலைப்பெழுத்து போடவேண்டும் எனக் கூறினார். அதனால்தான் நான் மாற்றினேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “என் தம்பி வினோத் எல்லா படத்துலயும் அவர் பெயர H வினோத்துன்னு போட்டார். நான்தான் அவரை சந்தித்த போது இனிஷியலை தமிழில் போட சொன்னேன். அவர் அதுக்கப்புறம் மாத்தி தமிழ்ல போடுறார்” எனப் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்