"நல்ல கதையா திருடுங்க" சர்காரை புரொமோஷன் செய்த எச்.ராஜா

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (13:28 IST)
தளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் வெற்றிக்கு உந்துணையாக இருந்து படத்தை வெற்றியடைய செய்தவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எச்.ராஜா. 

மெர்சல் படத்திற்கு அவர்கள் கூறிய எதிர்மறையான கருத்துக்களும்,  எதிர்ப்புகளும்  தான் அந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 
 
தளபதி விஜய் நடித்துள்ள  சர்கார் படம் பற்றி தமிழிசையும், எச்.ராஜாவும் கூறியுள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ’’கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு பற்றி படம் எடுத்திருக்கிறார்கள். என தமிழிசை கடுமையாக தாக்கியிருந்தார்.   
 
இந்நிலையில் தற்போது மீண்டும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா " படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா  திருடுங்கடா" என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
தமிழிசை மற்றும் ,எச்.ராஜாவின் சர்கார் குறித்த எதிர்மறையான கருத்துக்களுக்கு விஜய் ரசிகர்களும் நெட்டிசன்களும் அவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்