ஒரு பாடலுக்காகக் காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (14:38 IST)
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஐங்கரன்’ படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியிருக்கிறது
 
அதர்வாவை வைத்து ‘ஈட்டி’ படத்தை இயக்கியவர் ரவிஅரசு. இந்தப் படத்துக்காக நிஜ அத்லெட்டிக் வீரனைப் போல அதர்வாவை மாற்றியிருந்தார். இவர் தற்போது இயக்கிவரும் படம் ‘ஐங்கரன்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்கிறார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவராக நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். 
 
இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. ஒரே ஒரு பாடல் மட்டும்தான் பாக்கி. தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் நடைபெற்று வருவதால், அது முடியட்டும் எனக் காத்திருக்கிறது படக்குழு. போராட்டம் முடிந்ததும், கோவாவில் இந்தப் பாடலைப் படமாக்க இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்