விஜய் டிவியில் ‘அருவி’ மற்றும் ‘வேலைக்காரன்’

வியாழன், 12 ஏப்ரல் 2018 (13:14 IST)
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ‘அருவி’ மற்றும் ‘வேலைக்காரன்’ படங்களை ஒளிபரப்புகிறது விஜய் டிவி
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸான படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கிய இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை, ஆர்.டி.ராஜா தயாரித்தார். இந்தப் படம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
 
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸான படம் ‘அருவி’. சோசியல் பொலிட்டிக்கல் டிராமாவாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அதிதி பாலன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறந்த படம் என அனைவராலும் கொண்டாடப்பட்ட இந்தப் படம், வசூலிலும் குறைவைக்கவில்லை. இந்தப் படம் இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்