இனி சிஎஸ்கேவின் தாய்வீடு சென்னை அல்ல பூனே....

வியாழன், 12 ஏப்ரல் 2018 (13:22 IST)
11வது ஐபிஎல் சீசன் கடந்த 7 ஆம் தேதி துவங்கியது. இந்த சீசனில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இதனால், சென்னைவாசிகள் அனைவரும் கொண்டாட்டத்தில் இருந்தனர். 
 
ஆனால், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருவதால், இந்த வேலையில் ஐபிஎல் போட்டிகள் சென்னையின் நடக்ககூடாது என எதிர்ப்புகள் கிளம்பியது. 
 
கடந்த 10 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருந்த போட்டிக்கு முன்னர் சாலை மறியல் போராட்டங்கள் மைதானத்தை சுற்றி இருக்கும் பகுதிகளை சில மணி நேரம் பதற்றத்தில் ஆழ்த்தியது.
 
மைதானத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டம், தடியடி, போலீஸ் மீது தாக்குதல், சிஎஸ்கே ரசிகர்கள் மீது தாக்குதல் என மைதானத்தை சுற்றி இருந்த பகுதிகள் சிறிது நேரத்திற்கு போர்களமாக மாறியது. 
வீரர்கள் பாதுகாப்பு, வருமானம் குறைவு ஆகிய அம்சங்ககளை கணக்கில் கொண்டு இனிவரும் போட்டிகள் சென்னையில் நடத்தப்படாது என்று ஐபிஎல் போட்டி நிர்வாகம் முடிவு செய்தது. 
 
எனவே, சென்னை அணி விளையாட உள்ள மீதமுள்ள 6 போட்டிகள் பூனே மைதானத்திற்கு மற்றப்பட்டுள்ளது. இனி சென்னை அணியின் தாய்வீடு பூனேதான். 
 
புனேயிவில் சிஎஸ்கே விளையாட இருக்கும் போட்டிகள்:
ஏப்ரல் 20: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஏப்ரல் 28: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
ஏப்ரல் 30: சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ்
மே 5: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மே 13: சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மே 20: சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்