மலியாளத்தில் பிஸியாகும் தமிழ்ப் படம்… எல்லாம் மின்னல் முரளி வெற்றியால்தான்!

சனி, 2 ஏப்ரல் 2022 (17:47 IST)
மின்னல் முரளி படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார் குரு சோமசுந்தரம்.

தமிழில் ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா என ஆரம்பத்தில் கலக்கிய குரு சோமசுந்தரம், அதன் பின்னர் அவரின் திறமைக்கு ஏற்ற வேடங்கள் கிடைக்காமல் தடுமாறி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள மின்னல் முரளி படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதில் ஷிபு என்ற ஆண்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.

அதன் பலனாக இப்போது மோகன் லால் இயக்கும் பர்ரோஸ் என்ற படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதையடுத்து இப்போது கப் மற்றும் ஹயா ஆகிய படங்களிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்