பழம்பெரும் நடிகை லலிதா காலமானார்- திரையுலகினர் அஞ்சலி!

புதன், 23 பிப்ரவரி 2022 (08:40 IST)
ஏராளமான தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த மூத்த நடிகை லலிதா இன்று காலமானார்.

நாடக உலகில் 1960 களில் நடித்துவந்த லலிதா, 1970 ஆம் ஆண்டு வெளியான கூட்டுக்குடும்பம் எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 500க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ள அவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். தமிழில் காதலுக்கு மரியாதை படம் இவருக்கு நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. இவரின் இயக்குனர் பரதன் மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர்.

உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த லலிதா நேற்று இரவு கொச்சியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்