நெட்பிளிக்ஸ் உலக டாப் 10 ல் மின்னல் முரளி!

சனி, 1 ஜனவரி 2022 (10:04 IST)
நெட்பிளிக்ஸில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியான மின்னல் முரளி திரைப்படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சூப்பர் ஹீரோ படங்களில் வித்தியாசமாகவும் எளிமையாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இந்தியா தாண்டி உலக அளவிலும் கவனம் பெற்றுள்ளது.

நெட்பிளிக்ஸில் கடந்த வாரத்தில் உலக டாப் 10 ல் மின்னல் முரளி இடம்பிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸில் இதுவரை 59.9 லட்சம் மணி நேரம் பார்க்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்