விஜய் பட நடிகைக்கு கொரோனா உறுதி…ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (21:31 IST)
கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது

கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் முகக்கவசத்துடன் செல்லவேண்டுமெனக் கூறியுள்ளது. தக்கப் பாதுக்காப்பு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது..

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் ஊர்டங்கு அமலில் உள்ள நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு வருமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை கெளரி கிஷானுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனுடன் இணைந்து நடித்த கெளரி கிஷானுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்