சிரஞ்சீவியை அடுத்து இன்னொரு சூப்பர் ஸ்டாரை இயக்கும் மோகன் ராஜா!

வெள்ளி, 26 மார்ச் 2021 (14:21 IST)
மோகன் ராஜா அடுத்து நாகார்ஜுனா மற்றும் அவர் மகன் அகில் ஆகியோர் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளாராம்.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். அந்த படத்தை ரீமேக் படங்களை இயக்குவதில் வல்லுனரான மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படம் முடிவதற்கு முன்னரே தெலுங்கு சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான நாகார்ஜுனா அவரது மகன் அகிலுடன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் மோகன் ராஜா. அதனால் இன்னும் சில ஆண்டுகளுக்கு அவர் தமிழ் சினிமா பக்கமே வரமாட்டார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்