கூகுள் குட்டப்பா அடுத்த சிங்கிள் அப்டேட்… வெளியிடப் போவது யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:20 IST)
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் அடுத்த பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன.

இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே எஸ் ரவிக்குமார் வாங்கி அதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். அவரின் உதவியாளர்கள் சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கி உள்ளனர். படத்துக்கு கூகுள் குட்டப்பா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதுபோல ஏற்கனவே இரண்டு பாடல்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள யாரோ யாரோ என்ற பாடலை ஆர் ஆர் ஆர் பட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி வெளியிட உள்ளார். வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை  4.30 மணிக்கு இந்த பாடலை அவர் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்