கோட் படத்தில் மோகன் கதாபாத்திரத்துக்கு முதலில் இவர்களைதான் நினைத்திருந்தேன்… இயக்குனர் வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (11:19 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் கனெக்ட்டாக அமைந்துள்ளது. படத்தில் இடம்பெறும் சி எஸ் கே சம்மந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் கொடுத்தன. ஆனால் மற்ற மாநில மொழி ரசிகர்கள் இதை ரசிக்கவில்லை. இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு “படத்தில் சி எஸ் கே ரெஃபரன்ஸ் இருப்பதால் வெளிமாநில ரசிகர்களுக்குப் படம் பிடிக்கவில்லை போல. நான் சி எஸ் கே அணிக்கு சாதகமாகக் காட்சிகள் வைத்திருப்பதால் மும்பை மற்றும் பெங்களூர் ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தும், அவர்களைப் பெரியளவில் வெங்கட்பிரபு பயன்படுத்தவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக முதல் முறையாக வில்லனாக நடித்த மோகனுக்கு பெரிதாக படத்தில் எந்த வேலையும் இல்லாமல் பத்தோடு பதினொன்றாக வந்து செல்கிறார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘மோகன் கதாபாத்திரத்திற்கு முதலில் மாதவன் அல்லது அரவிந்த்சுவாமி ஆகியோரைதான் கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்