இதையடுத்து, 21 கேள்விகளுக்கு 5 நாட்களில் பதில் அளிக்குமாறு விக்கிரவாண்டி போலீஸார் அறிவுறுத்தினர். பின்னர், காவல் துறை கேட்டிருந்த கேள்விகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கடந்த 6-ம் தேதி பதில் கடிதம் அளித்தார்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விக்கிரவாண்டி போலீஸார் 33 நிபந்தனைகளுடன் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு அனுமதி வழங்கினர். இதனிடையே கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், கடந்த திங்கட்கிழமை விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார்.
இந்த கூட்டத்தில் மாநாடு தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை விதித்துள்ள 33 நிபந்தனைகளை பின்பற்றி, மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால் மாநாட்டை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் இறுதியில் நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.