கோவா திரைப்பட விழா தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (09:44 IST)
கோவா திரைப்பட விழா ஆரம்பிக்கும் தேதியை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் கோவா சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி இந்தத் திரைப்பட விழா முடிவடையும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடக்காமல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 52 ஆவது சர்வதேச திரைப்பட விழா வழக்கம்போல நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. போட்டி பிரிவில் கலந்து கொள்ள விரும்பும் படங்கள் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்