சந்தானத்தை இயக்குகிறாரா கௌதம் மேனன்?... வெளியானத் தகவல்!

vinoth

புதன், 30 ஏப்ரல் 2025 (10:22 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. ஆனால் அதன் பின்னர் அவர் தயாரிப்புப் பணிகளில் கால்பதித்ததால் இயக்குனராக பின்னடைவை சந்தித்தார். அவர் இயக்கி தயாரித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதையடுத்து அவர் மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து ‘டாம்னிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்றொரு படத்தை இயக்கினார். அந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தமிழில் அவர் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அவர் வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார். சந்தானத்துடன் இணைந்து DD Next level படத்தில் நடித்துள்ள நிலையில் அவர் சந்தானத்தை வைத்து ஒரு படம் இயக்க்ப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் சந்தானம் இதை ஒரு நேர்காணலிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்