ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடித்து 2005ல் வெளியான படம் சச்சின். கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் முதல் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் 2005ல் வெளியான இந்த படம் அதன் 20வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக கடந்த வியாழக்கிழமை ரீரிலீஸ் செய்யப்பட்டது. ரி ரிலீஸில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.