பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

vinoth

புதன், 30 ஜூலை 2025 (14:23 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.. இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ’ராஜாசாப்’ படத்துக்காக இணைந்துள்ளார் பிரபாஸ். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் ஒரு காமெடி ஹாரர் த்ரில்லர் படமாக ராஜாசாப் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படாததால் ரிலிஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்போது டிசம்பர் 5 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சஞ்சய் தத் பிரபாஸ் கதாபாத்திரத்துக்கு தாத்தாவாக நடிப்பதாகவும், அவரது கதாபாத்திர தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்