'ஞாபகம் வருகிறதா? 'விஸ்வரூபம் 2' தீம் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (22:55 IST)
கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நானாகிய நதிமூலமே' என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற தீம் பாடலான 'ஞாபகம் வருகிறதா? என்ற பாடல் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தீம் சாங் நாளை இரவு 9 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு பாடல் வெளியாகியுள்ள நிலையில் நாளையும் ஒரு பாடல் வெளியாகவுள்ளது கமல் ரசிகர்களுக்கும், பிக்பாஸ் ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்