வேட்டையன் படம் சூர்யா சார் இல்லைன்னா நடந்திருக்காது.. இயக்குனர் ஞானவேல் நெகிழ்ச்சி!

vinoth
புதன், 9 அக்டோபர் 2024 (07:10 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளன. படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஞானவேல் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் “நான் முன்பே சொல்லியது போல சூர்யா சார் இல்லையென்றால் வேட்டையன் படமே நடந்திருக்காது. அவரை நான் இயக்க இருந்த படத்துக்கான வேலைகளை நான் தொடங்கியபோதுதான் வேட்டையன் வாய்ப்பு வந்தது. அவர்தான் என்னை வேட்டையன் படம் செய்ய சொன்னார்.” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்