’ஜெண்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (09:11 IST)
’ஜெண்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!
பிரபல தயாரிப்பாளர் ஜே கே டி குஞ்சுமோன் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜென்டில்மேன் 2 என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
 மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என சரியாக யூகித்து சொல்பவர்களுக்கு  தங்க காசுகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார் 
இந்த நிலையில் சற்று முன் ஜென்டில்மேன் படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான விடை கண்டு பிடித்தவர்களுக்கு விரைவில் தங்க காசுகள் வழங்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது
 
கடந்த 1993-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் உருவான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தில் யார் யார் நடிப்பார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்