ஜீனியஸ் - திரைவிமர்சனம்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (15:25 IST)
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வெளியாகி வரும் நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜீனியஸ் படமும் இந்த பட்டியலில் இணைகிறதா என பார்ப்போம்.
 
ஆடுகளம் நரேன் - மீரா கிருஷ்ணன் தம்பதியின் ஒரே மகன் ரோஷன். இவன் சிறு வயது முதல் அதிபுத்திசாலியாக இருப்பதால் படிப்பில் மட்டுமே இவனது முழு கவனத்தை திருப்புகின்றனர் இவனது பெற்றோர். 
 
இதன் விளைவாக 10 ஆம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று, கல்லூரி, ஐடி கம்பெனியில் நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என செட்டில்லாகிறார். ரோஷனின் திறமையை பார்த்து கம்பெனியில் இவனுக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது. இதனால், இரவு பகல் பாராமல் உழைத்து மன அழுத்தம் ஏற்படுகிறது. 
மன அழுத்தத்தால் அடிக்கடி கோபப்படும் சூழ்நிலையும் தன்னிலை மறக்கும் நிலையும் உருவாகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து ரோஷன் குணமடைந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
 
கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் ரோஷன், தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாநாயகிக்கு பெரிய வேலை இல்லை. 
 
ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன் ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம். அதோடு, ஜெயபிரகாஷ், சிங்கமுத்து, ஈரோடு மகேஷ், பாலாஜி, திலீபன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.
 
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் போதாது கூடவே விளையாட்டும் முக்கியம் என்பதை ஜீனியஸ் படத்தின் மூலம் இயக்குனர் சொல்லியிருக்கிறார். 
 
மொத்தத்தில் ஜீனியஸ் படமல்ல அட்வைஸ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்