சீனு ராமசாமி & ஜி வி பிரகாஷ் படத்தின் வாய்ப்பை பெற்ற நடிகை!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (15:23 IST)
நடிகர் ஜி வி பிரகாஷ் இப்போது சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

கலைப்புலி எஸ் தாணு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி இப்போதைக்கு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டு இருப்பதால் அந்த படங்களை முடித்து விட்டுதான் தாணுவுக்கு தேதிகள் கொடுக்க முடியும் என்று சொல்லிவிட்டாராம்.

இதனால் இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை வேலன் படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க உள்ளதாம். இந்த படத்துக்கு கலைமகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் நாயகியான காயத்ரி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் போதுமான வாய்ப்புகள் இல்லாததால் இயக்குனர் ஆவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்