’பீஸ்ட்’ படத்திற்கு ஏன் தடை விதிக்கணும்? காயத்ரி ரகுராம் கேள்வி!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (13:46 IST)
’பீஸ்ட்’ படத்திற்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என பாஜக பிரபலமும் நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
’பீஸ்ட்’ படத்திற்கு குவைத் குறித்து அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என முஸ்லீம் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது
 
 இந்த கோரிக்கை குறித்து தனது கருத்தை தெரிவித்த காயத்ரி ரகுராம் ’பீஸ்ட்’ திரைப்படம் தீவிரவாதிகளுக்கு எதிரான படம் தான் என்றும் முஸ்லிம்களுக்கு எதிரான படம் இல்லை என்றும் அதனால் ஏன் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
 
ஏற்கனவே அவர் விஜய்க்கு ஆதரவாக பல இடங்களில் குரலெழுப்பி நிலையில் தற்போது ’பீஸ்ட்’  படத்திற்கு ஆதரவாகவும் காயத்ரி ரகுராம்  குரல் எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்