10 லட்ச ரூபாயைக் கூட தாண்டாத கௌதம் மேனனின் ஜோஷ்வா முதல் நாள் வசூல்!

vinoth
சனி, 2 மார்ச் 2024 (14:56 IST)
விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கதையை வருண்என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற பெயரில் கௌதம் மேனன் சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்கி முடித்தார். ஆனால் படம் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது.

இதையடுத்து மார்ச் 1 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. படத்துக்காக கௌதம் மேனன் பயங்கரமாக ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டார். ஆனால் படம் ரிலீஸான பிறகு பார்வையாளர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படம் முழுவதும் ஒரே ஆக்‌ஷன் காட்சிகளாக இருப்பதாவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் முதல் நாளில் இந்த படம் 10 லட்ச ரூபாய் அளவுக்குக் கூட வசூல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்