வடிவேலுவை இயக்குகிறாரா கௌதம் மேனன்?

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (08:20 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்த மாமன்னன் கதாபாத்திரம் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அவர் திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் என பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது வடிவேலுவை அதுபோல ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் இயக்க தயாராகி வருகிறாராம் கௌதம் மேனன். இந்த படத்தை ஐசரி கணேஷ் தன்னுடைய ஐசரி பிலிம்ஸ் சார்பாக தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்