தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் சில படங்களை தயாரிக்க ஆரம்பித்து இப்போது ஏராளமான சிக்கல்களில் சிக்கி உள்ளார். அதனால் அவரின் நரகாசூரன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்கள் ரிலிசாகாமல் உள்ளன.
இந்நிலையில் கௌதம் மேனன் இப்போது அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் சினிமாவுக்கு வரும் இயக்குனர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். வெற்றி பெற்ற ஒரு இயக்குனரையே இந்த வியாபாரம் பாதிக்கிறது என்றால் நீங்கள் யோசிக்க வேண்டும். சினிமா சந்தையைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். கௌதம் மேனன் இப்போது ஜோஷ்வா உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்.