கொரோனா காலத்தில் 10 பில்லியன் டாலர் வருவாய்… ஹெச் சி எல் நிறுவனம் அறிவித்த போனஸ்!

செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:15 IST)
கொரோனா பெருந்தொற்று காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

கொரோனா பெருந்தொற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள் நல்ல பெருந்தொற்று (good pandemic) என அழைக்கிறார்களாம். அதற்குக் காரணம் பெருந்தொற்று காலத்தில் அவர்களின் வருவாய் பல மடங்கு அதிகமாகிக் கொண்டு செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ஹெ சி எல் 2020 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாம்.

இதனால் தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் ஒண்டைம் போனஸாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 1.5 லட்சம் ஊழியர்கள் இருக்கும் இந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் இந்த போனஸ் அளிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்