மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் ஜி வி பிரகாஷ்…!

vinoth
புதன், 31 ஜூலை 2024 (07:58 IST)
கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய்குமார். ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக பல கருத்துகளைப் பேசி வரும் நிலையில் அவர் நடித்த படங்கள் எதுவும் கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெறவேயில்லை. ஆனாலும் அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது 150 ஆவது படத்தில்  சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சர்பிரா’ வில் நடித்தார். இது தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரரைப் போற்று திரைப்படத்தின் ரீமேக். ஆனாலும் இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்துக்குத் தமிழில் இசையமைத்த ஜி வி பிரகாஷே இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் அக்‌ஷய் குமார் அடுத்து நடிக்கும் ஸ்கைபோர்ஸ் என்ற திரைப்படத்துக்கும் ஜி வி பிரகாஷ் இசையமைக்க இப்போது ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் இந்த படத்துக்கு கீரவாணி இசையமைக்க ஒப்பந்தம் ஆன நிலையில் அவர் கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிடவே, இப்போது ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்