தமிழ் சினிமாவின், ஏன் இந்திய சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர் ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். உலகில் சினிமா தயாரிக்கும் பல மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரின் மனைவி சாய்ரா பானு திடீரென ஏ ஆர் ரஹ்மானைப் பிரிவதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஏ ஆர் ரஹ்மானும் விவாகரத்தை உறுதி செய்தார். இது சம்மந்தமானப் பல விதமான வதந்திகள் இணையத்தில் பரவி வந்த நிலையில் சாய்ரா பானு “உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவர் ரஹ்மான். எங்கள் விவாகரத்து சம்மந்தமாக அவர் மீது அவதூறு பரப்புவது ஏற்றுக் கொள்ளப் பட முடியாதது” எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரஹ்மான் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.