ராகெட்ரி படத்தை பாராட்டிய முன்னாள் இஸ்ரோ தலைவர் !

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (23:35 IST)
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படத்தை முன்னாள் இஸ்ரோ தலைவர் பாராட்டியுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.  இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார்.

இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன். சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் கேன்ஸ் விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து கடந்தவாரம் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தைப் பார்த்துள்ள இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பாராட்டியுள்ளார்.  இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், விஞ் ஞானி  நம்பி  நாராயணனுக்கு நடந்ததுபோன்று யாருக்கும் நடக்கக்கூடாது என்ற   நோக்கத்துடன்  நடிகர் மாதவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.   நான் இப்படத்தைப் பார்த்தபோது,  நான் 36 ஆண்டுகள் பணியாற்றியபோதும், இப்போது அங்கு வாழ்ந்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது. இப்படதை  ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேன்டும். நடிகர் மாதவனுக்கு சல்யூட் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்