“அனைவரும்… குறிப்பாக இளைஞர்கள் பாருங்கள்…” ராக்கெட்ரி படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

திங்கள், 4 ஜூலை 2022 (14:45 IST)
மாதவன் நடிப்பில் வெளியாகியுள்ள ராக்கெட்ரி திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.  இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன். சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் கேன்ஸ் விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து கடந்தவாரம் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தைப் பார்த்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் குறிப்பாக இளைஞர்கள் பார்க்கவேண்டும். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு ஆளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடு பட்ட நம்பி நாராயணன் வரலாற்றை மிக தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குனராக தனது முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனராக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன்” எனப் பாராட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்