விஜய் படத்துக்காக தெலுங்கை டீலில்விட்ட கீர்த்தி சுரேஷ்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (18:18 IST)
குறுகிய காலத்தில் உயரத்துக்கு வந்த நடிகை சமீபத்தில் கீர்த்தி சுரேஷாகத்தான் இருக்கும். இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானவர் இப்போது விஜய் படத்தின் நாயகி.


 
 
பரதன் இயக்கும் விஜய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறவர், சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு படம் ஒன்றும் அவரது கணக்கில் உள்ளது.
 
விஜய் படம் தொடங்குவதற்கு முன்பே தெலுங்குப் படத்தை முடித்து கொடுத்தார் கீர்த்தி சுரேஷ். அந்தப் படத்தில் சில பேட்ச் வொர்க்ஸ். இரண்டு நாள் நடித்துத் தாருங்கள் என்று கேட்டதற்கு இப்போது முடியாது என்று மறுத்துள்ளார். விஜய் படத்தில் நடிப்பதால் தெலுங்குப் படத்துக்கு தேதியை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறார் கீர்த்தி.
 
இந்த விஷயம் உங்க கீர்த்திக்கு களங்கம் ஏற்படுத்தாம பார்த்துக்குங்க.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்