முந்தைய டீவீட்டுக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (11:13 IST)
சமீக காலமாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் பரபரப்பாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் குறித்து நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

 
அதில் நடிகை கஸ்தூரி, 'ரோட்டுல மறியல். “யார் அப்பன் வீட்டு காசு" ன்னு கோஷம். எல்லாம் #பழக்கதோஷம்.  அடுத்தவாரிசுகள்' என்று கலாய்த்து டுவீட்டர் பதிவிட்டிருந்தார். அதற்கு ஏராளமானோர் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 
இந்நிலையில் தற்போது அந்த டுவீட்டிற்கு நக்கலாக மன்னிப்பு கேட்டுள்ளார். அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை  உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான். என்று பதிவிட்டுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்