பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு முதல் பரிசு...

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (18:29 IST)
சென்னையில் 17 வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதில் ரா. பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
சென்னையில் கடந்த 10 ஆம் தேதி, துவங்கிய 17 வது சர்வதேச படவிழாவில், 55 நாடுகளில் இருந்து 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிரப்பட்டன. 
 
தமிழ் படங்கள் சார்பில், அடுத்த சாட்டை, அசுரன், பக்ரீத், கனா, பிழை , சில்லுக் கருப்பட்டி, ஒத்த செருப்பு உள்ளிட்ட  படங்கள் திரையிடப்பட்டன.
 
இந்நிலையில் நேற்று மாலையுடன் முடிவடைந்த இந்த விழாவில், பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ’ஒத்த  செருப்பு ’ படம் முதல் பரிசு வென்றது.  இதில்,படத்தின் இயக்குநருக்கு ரூ. 2லட்சம் ரூபாயும், தயாரிப்பாளருக்கு ரூ. 1லட்ச ரூபாயும் பரிசு வழங்கப்பட்டது.
 
மேலும், சில்லுக் கருப்பட்டி மற்றும் பக்ரீத் ஆகிய படங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.  இப்படங்களின் இயக்குநர்களுக்கு ரூ. 50 ஆயிரம் படமும், தயாரிப்பாளருக்கு தலா 50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
 
பார்த்திபனின் முயற்சிக்கு கிடைத்த  மிகப்பெரிய அங்கீகாரமாகவே இது பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்