பட்டாசு ஆலை விபத்து: இனியும் அரசு மௌனம்தான் காக்கப்போகிறதா? கமல்ஹாசன் டுவீட்

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (22:07 IST)
சமீபத்தில் , சிவகாசி அருகே சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட 19 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் ஏற்கனவே குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஆலை 4 பெருக்கு உள் குத்தகைக்கு அளிக்கப்பட்டதும், அளவுக்கு அதிகமான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டதும் தெரிய வந்தது.

இந்த விபத்து நடந்த சில நாட்களிலேயே இன்று மீண்டும் சிவகாசியில் மற்றோரு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

சிவகாசி அருகில் உள்ள காளையார்க்குறிச்சி என்ற பகுதியில் சற்று முன்னர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது என்பதும் இந்த வெடி விபத்தில் 3 பேர் பலியானதாக வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவலை பார்த்தோம். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது அதுமட்டுமின்றி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், பட்டாசுத் தொழில்துறையில், பாதுகாப்புக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் என்ன என்று நீதிமன்றம் சினக் கேள்வி எழுப்பி முடிப்பதற்குள் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு ஆறு பேர் பலியாகியிருக்கிறார்கள். இனியும் அரசு மௌனம்தான் காக்கப்போகிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்