தமிழகத்தின் வருவாய் 18% குறையும் !

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:51 IST)
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி, கிராமப்புற வீட்டு வசதி, மருத்துவம், கல்வி என பல துறைகளுக்குமாக நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில் அரசின் ஆண்டு வருவாயை விட செலவினங்கள் அதிகரித்திருப்பதால பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தனது சமீபத்திய பேட்டியில் இதனையே குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது, 
 
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 2.02% ஆக இருக்கும் தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
ஒருபக்கம் வருவாய் குறைந்து, கூடுதல் செலவு ஏற்பட்டதால் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதேபோல தமிழக அரசு அடுத்த நிதியாண்டில் கடன் வாங்கும் அளவும் குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்