தாய்ப்பாலை தானம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்...குவியும் பாராட்டுகள்

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (23:24 IST)
இந்தியில் பிரபல தயாரிப்பாளர் நிதி பர்மர் ஹிராநந்தானி. இவர் டாப்ஸி, பூமி பட்னெகர் ஆகியோர் நடித்த சாந்த் கி ஆங் என்ற படத்தை அனுரக் காஷ்யக் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார்.

இந்நிலையில் இவருக்குக் கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது.  எனவே தனது குழந்தைக்குத் தேவையான தாய்ப் பால் போன அதிகமாகச் சுரந்த தாய்ப்பாலை வீணாக்காமல் மருத்துவரின் ஆலோசனை கூறவே அதைத் தானம் கொடுத்துள்ளார்.

மேலும் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட அளவு தாய்ப்பாலை தானம் கொடுத்துள்ளார்.  இதுவரை அவர் சுமார் 42 லிட்டர் அளவு  தாய்ப்பால் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் நிதி பர்மனின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்