லாபம்படத்தில்தான்சம்மந்தப்பட்டகாட்சிகளைஎல்லாம்நடித்துமுடித்துக்கொடுத்துவிட்டதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்துக்குப் பின் விஜய் சேதுபதி லாபம் எனும் படத்தில் நடிக்கிறார். இது கிராமப்புற பின்னணியைக் கொண்ட விவசாயம் பற்றிய படமாகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் விஜய் சேதுபதி.
படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர். ஆனால் இப்படப்பிடிப்புத் தளத்தில் கொரோனா தொற்றுப் பரவ வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் விஜய் சேதுபதி நடித்து முடித்துக் கொடுத்துள்ளார். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்புக்கு பின்னர் மொத்த படமும் முடியும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிரபல நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் நிலையில், விஜய் சேதுபதியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லாபம் படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் இன்று நெட்பிளிக்ஸ் இப்படத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.