பிரபல மலையாள நடிகர் மரணம்...திரைத்துறையினர் அஞ்சலி

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (14:03 IST)
மலையாள சினிமாவில் பிரபல நடிகர் சஜித் பட்டாளம் இன்று உடல்  நலக்குறைவால் காலமானார்.
 
சினிமா உலகில் மலையாள சினிமாவுக்கு என்று தனித்த இடமுண்டு. இந்த நிலையில் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சஜித் பட்டாளம்(54).
 
இவர், டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'களா' என்ற படத்திலும், நிவின் பாலி நடிப்பில் வெளியான 'கனகம் காமினி கலகம்,' 'ஜான் இ மான்' ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். அத்துடன் பல வெப் சீரீஸிலும் அவர் நடித்து வந்தார்.
 
கடந்த சில நாட்களாக உடல்  நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில், இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்