பிரபல பாலிவுட் நடிகர் மரணம்......திரையுலகினர் இரங்கல்

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (17:20 IST)
பிரபல பாலிவுட் நடிகர் விக்ரம் கோகலே இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது றைவுக்கு சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிர மா நிலத்தைச் சேர்ந்த பழம்பெரும்  நடிகர் விக்ரம் கோகலே,. இவர், 1971 ஆம் ஆண்டு   பாலிவுட்டில்,  தன் 26 வயதில் அமிதாப் பச்சன் நடித்த பர்வானா என்ற படத்தின்  நடிகராக அறிமுகம் ஆனார்.

சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நடிகர் விக்ரம் கோகலே(77). இன்று சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார்.

இவர், அனுமதி என்ற மராத்தி படத்தில் நடித்தற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். மேலும், இவர் கமலின் ஹேராம் படத்திலும் நடித்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பின், பாலிவுட், தெலுங்கு, மராட்டி உள்ளிட்டடபல மொழிகளில் நடித்து  புகழ்பெற்றார்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்