சேலம் மாவட்டம் சாமிவேல்- சின்னப்பொண்ணு தம்பதியினரின் கடைசி மகள் 13 வயதான ராஜலட்சுமி என்ற சிறுமி ஆதிக்க சாதி வெறியரான தினேஷ் குமார் என்பவரால் பாலியல் தொல்லைக்குட்படுத்தப்பட்டு, அந்த கொடுமையை தனது தாயிடம் கூறியதற்காக தினேஷ்குமார் பயங்கரமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதன் பின்னார் காவல்நிலயத்தில் சரணடைந்த தினேஷ் குமாருக்கு மன்நிலை சரியில்லை எனக்கூறி அவரது மனைவியும் உறவினர்களும் வழக்கை திசைதிருப்பப் பார்த்தனர்.
பாதிக்கப்பட்ட ராஜலட்சுமி தலித் சிறுமி என்பதால் இதுபற்றிய பொது சமூகத்தில் எழவில்லை என சமூக ஆர்வலர்கள் கடுமையான விமர்சனம் செய்தனர். பல சமூக அர்வலர்களும் களச் செயல்பாட்டாளர்களும் ராஜலட்சுமியின் பெர்றோருக்கு ஆதரவாக களத்தில் நின்று இந்த விவகாரத்தை பொது சமூகத்திடம் கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் சமூக நீதியைப் போற்றிப் பாதுகாக்கும் கட்சியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள திமுக இந்த படுகொலை குறித்து ஒரு சின்ன கண்டன அறிக்கைக்கூட விடாமல் மௌனம் காத்து வந்தது. ஆனால தங்கள் சித்தாந்தத்தோடு தன் காலம் முழுவதும் முரண்பட்டவரும், தங்கள் கட்சியின் பிதாமகன் பெரியாரைக் கடுமையாகத் தாக்கிப் பேசியவருமான முத்துராமலிங்கத்தின் குருபூஜையில் கலந்துகொண்டது திமுக மீதும் ஸ்டாலின் மீதும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதை உணர்ந்த ஸ்டாலின் இது குறித்த தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தனது டிவிட்டரில் இன்று அவர் வெளிட்டுள்ள் செய்தியில் ‘சேலத்தில் 13வயது ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது. முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக்கரத்தால் அடக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.