மணிரத்னம் தயாரிக்கும் நவரசா –ஒப்பந்தம் ஆன மலையாள நடிகர்!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (11:01 IST)
மணிரத்னம் ஓடிடியில் தயாரிக்கவுள்ள புதிய இணையத்தொடரில் நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்துள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில அவர் குறுகிய இடைவெளியில் குறைந்த பட்ஜெட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.  அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளத்துக்காக மணிரத்னம் ஒரு புராணத்தொடரை உருவாக்க இருக்கிறார். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக மணிரத்னம் உள்ளார். இதுவரை கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்குநர்களாக உறுதியாகியுள்ள நிலையில், மற்ற இயக்குனர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் ஒரு கதையில் நடிக்க சூர்யா ஒப்பந்தமான நிலையில் இப்போது மற்றொரு கதையில் பஹத் பாசில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்