மாஸ் காட்டும் மலையாள சினிமா… ஐந்து நாட்களில் 50 கோடி வசூலித்த பஹத் பாசிலின் திரைப்படம்!

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (07:33 IST)
கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மலையாளத் திரைப்படமான ரோமாஞ்சம். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படமாக குறுகிய லொகேஷன்களில் படமாக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 54 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. சுமார் 3 கோடி ரூபாயில் உருவான இந்த திரைப்படம் இந்த ஆண்டில் மலையாள சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இதையடுத்து ஜித்து மாதவனின் அடுத்த படத்தில் பஹத் பாசில் நடிக்க இருக்கிறார் என்ற போதே எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆவேஷம் என்ற அந்த படத்தின் டைட்டில் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்த படம் கடந்த 11 ஆம் தேதி ரிலீசான நிலையில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து தற்போது ஐந்து நாட்களில் உலகளவில் இந்த படம் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்