மலையாள சினிமாவில் இதுதான் முதல்முறை… மூன்றே நாளில் மைல்கல் வசூலை ஈட்டிய ஆடுஜீவிதம்!

vinoth

திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:22 IST)
மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’  நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் கதை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் கொரோனா காலத்தில் அரபு நாடுகளில் படமாக்கப்பட்டது.

படத்தின் உருக்கமான காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாய் நெகிழச் செய்துள்ளன. இதையடுத்து படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் முதல் நாளில் மட்டும் இந்த படம் 15 கோடி ரூபாய் அளவுக்கு உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வார விடுமுறை நாட்களில் வசூல் அதிகரித்து மூன்றே நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை தொட்ட திரைப்படம் என்ற சாதனையை தற்போது ஆடு ஜீவிதம் திரைப்படம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்